பொருட்பால் · அரசியல் · வெருவந்த செய்யாமை

குறள் 570வெருவந்த செய்யாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்லதில்லை நிலக்குப் பொறை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்குப் பக்க பலமாக்கிக் கொள்ளும்; அதைப் போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 116 · ஸ்கேன் 149 · மூலமும் சான்றும்