பொருட்பால் · அரசியல்
57. வெருவந்த செய்யாமை
குறள் 561–570
- குறள் 561தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங் கொறுப்பது வேந்து.
- குறள் 562கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்நீங்காமை வேண்டு பவர்.
- குறள் 563வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
- குறள் 564இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்உறைகடுகி ஒல்லைக் கெடும்.
- குறள் 565அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேய்கண் டன்ன துடைத்து.
- குறள் 566கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடின்றி ஆங்கே கெடும்.
- குறள் 567கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம்.
- குறள் 568இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்சீறிற் சிறுகுந் திரு.
- குறள் 569செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்வெருவந்து வெய்து கெடும்.
- குறள் 570கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்லதில்லை நிலக்குப் பொறை.