பொருட்பால் · அரசியல் · வெருவந்த செய்யாமை

குறள் 568வெருவந்த செய்யாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்சீறிற் சிறுகுந் திரு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 116 · ஸ்கேன் 149 · மூலமும் சான்றும்