பொருட்பால் · அரசியல்

56. கொடுங்கோன்மை

குறள் 551560
  1. குறள் 551
    கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டல்லவை செய்தொழுகும் வேந்து.
  2. குறள் 552
    வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு.
  3. குறள் 553
    நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும்.
  4. குறள் 554
    கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு.
  5. குறள் 555
    அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை.
  6. குறள் 556
    மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்மன்னாவாம் மன்னர்க் கொளி.
  7. குறள் 557
    துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்அளியின்மை வாழும் உயிர்க்கு.
  8. குறள் 558
    இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின்.
  9. குறள் 559
    முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல்.
  10. குறள் 560
    ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின்.