பொருட்பால் · அரசியல் · கொடுங்கோன்மை

குறள் 559கொடுங்கோன்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத் தேக்கிப் பயன்படுத்தும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமானால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது.

மூலம் · அச்சுப் பக்கம் 114 · ஸ்கேன் 147 · மூலமும் சான்றும்