குறள் 558 — கொடுங்கோன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தைவிட அதிகத் துன்பம் தரக் கூடியது.
மூலம் · அச்சுப் பக்கம் 114 · ஸ்கேன் 147 · மூலமும் சான்றும்