பொருட்பால் · அரசியல்
55. செங்கோன்மை
குறள் 541–550
- குறள் 541ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை.
- குறள் 542வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோனோக்கி வாழுங் குடி.
- குறள் 543அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல்.
- குறள் 544குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு.
- குறள் 545இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்டபெயலும் விளையுளுந் தொக்கு.
- குறள் 546வேலன்று வென்றி தருவது மன்னவன்கோலதூஉங் கோடா தெனின்.
- குறள் 547இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின்.
- குறள் 548எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும்.
- குறள் 549குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்வடுவன்று வேந்தன் தொழில்.
- குறள் 550கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர்.