பொருட்பால் · அரசியல்
54. பொச்சாவாமை
குறள் 531–540
- குறள் 531இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
- குறள் 532பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
- குறள் 533பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்தெப்பானு லோர்க்குந் துணிவு.
- குறள் 534அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லைபொச்சாப் புடையார்க்கு நன்கு.
- குறள் 535முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழைபின்னு றிரங்கி விடும்.
- குறள் 536இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைவாயின் அதுவொப்ப தில்.
- குறள் 537அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்கருவியாற் போற்றிச் செயின்.
- குறள் 538புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யாதிகழ்ந்தார்க் கெழுமையும் இல்.
- குறள் 539இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
- குறள் 540உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளிய துள்ளப் பெறின்.