பொருட்பால் · அரசியல் · பொச்சாவாமை

குறள் 538பொச்சாவாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யாதிகழ்ந்தார்க் கெழுமையும் இல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 110 · ஸ்கேன் 143 · மூலமும் சான்றும்