பொருட்பால் · அரசியல்

53. சுற்றந்தழால்

குறள் 521530
  1. குறள் 521
    பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள.
  2. குறள் 522
    விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவுந் தரும்.
  3. குறள் 523
    அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடின்றி நீர்நிறைந் தற்று.
  4. குறள் 524
    சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்பெற்றத்தாற் பெற்ற பயன்.
  5. குறள் 525
    கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தாற் சுற்றப் படும்.
  6. குறள் 526
    பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத் தில்.
  7. குறள் 527
    காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்அன்னநீ ரார்க்கே உள.
  8. குறள் 528
    பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர்.
  9. குறள் 529
    தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்காரண மின்றி வரும்.
  10. குறள் 530
    உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்இழைத்திருந் தெண்ணிக் கொளல்.