பொருட்பால் · அரசியல்

52. தெரிந்து வினையாடல்

குறள் 511520
  1. குறள் 511
    நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும்.
  2. குறள் 512
    வாரி பெருக்கி வளம்படுத் துற்றவைஆராய்வான் செய்க வினை.
  3. குறள் 513
    அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு.
  4. குறள் 514
    எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர்.
  5. குறள் 515
    அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்சிறந்தானென் றேவற்பாற் றன்று.
  6. குறள் 516
    செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடெய்த உணர்ந்து செயல்.
  7. குறள் 517
    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்ததனை அவன்கண் விடல்.
  8. குறள் 518
    வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல்.
  9. குறள் 519
    வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்குந் திரு.
  10. குறள் 520
    நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமை கோடா துலகு.