பொருட்பால் · அரசியல்

51. தெரிந்து தெளிதல்

குறள் 501510
  1. குறள் 501
    அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும்.
  2. குறள் 502
    குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான் கட்டே தெளிவு.
  3. குறள் 503
    அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு.
  4. குறள் 504
    குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல்.
  5. குறள் 505
    பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தங்கருமமே கட்டளைக் கல்.
  6. குறள் 506
    அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்பற்றிலர் நாணார் பழி.
  7. குறள் 507
    காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்பேதைமை எல்லாந் தரும்.
  8. குறள் 508
    தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும்.
  9. குறள் 509
    தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள்.
  10. குறள் 510
    தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும்.