குறள் 504 — தெரிந்து தெளிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 103 · ஸ்கேன் 136 · மூலமும் சான்றும்