குறள் 510 — தெரிந்து தெளிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக் கொண்ட பின் அவரைச் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 104 · ஸ்கேன் 137 · மூலமும் சான்றும்