குறள் 502 — தெரிந்து தெளிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான் கட்டே தெளிவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 103 · ஸ்கேன் 136 · மூலமும் சான்றும்