பொருட்பால் · அரசியல்
50. இடனறிதல்
குறள் 491–500
- குறள் 491தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்னல் லது.
- குறள் 492முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்ஆக்கம் பலவுந் தரும்.
- குறள் 493ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின்.
- குறள் 494எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துதுன்னியார் துன்னிச் செயின்.
- குறள் 495நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்நீங்கின் அதனைப் பிற.
- குறள் 496கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்நாவாயும் ஓடா நிலத்து.
- குறள் 497அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி யிடத்தாற் செயின்.
- குறள் 498சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும்.
- குறள் 499சிறைநலனுஞ் சீரும் இலரெனினும் மாந்தர்உறைநிலத்தோ டொட்ட லரிது.
- குறள் 500காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சாவேலாள் முகத்த களிறு.