பொருட்பால் · அரசியல்
49. காலமறிதல்
குறள் 481–490
- குறள் 481பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
- குறள் 482பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு.
- குறள் 483அருவினை யென்ப உளவோ கருவியாற்கால மறிந்து செயின்.
- குறள் 484ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்கருதி இடத்தாற் செயின்.
- குறள் 485காலங் கருதி இருப்பர் கலங்காதுஞாலங் கருது பவர்.
- குறள் 486ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து.
- குறள் 487பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
- குறள் 488செறுநரைக் காணிற் சுமக்க இறுவரைகாணிற் கிழக்காந் தலை.
- குறள் 489எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்.
- குறள் 490கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து.