பொருட்பால் · அரசியல்

48. வலியறிதல்

குறள் 471480
  1. குறள் 471
    வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியுந் தூக்கிச் செயல்.
  2. குறள் 472
    ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாத தில்.
  3. குறள் 473
    உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர்.
  4. குறள் 474
    அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும்.
  5. குறள் 475
    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின்.
  6. குறள் 476
    நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்உயிர்க்கிறுதி ஆகி விடும்.
  7. குறள் 477
    ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்போற்றி வழங்கு நெறி.
  8. குறள் 478
    ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லைபோகா றகலாக் கடை.
  9. குறள் 479
    அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலஇல்லாகித் தோன்றாக் கெடும்.
  10. குறள் 480
    உளவரை தூக்காத ஒப்புர வாண்மைவளவரை வல்லைக் கெடும்.