குறள் 474 — வலியறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 97 · ஸ்கேன் 130 · மூலமும் சான்றும்