பொருட்பால் · அரசியல்

47. தெரிந்து செயல்வகை

குறள் 461470
  1. குறள் 461
    அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.
  2. குறள் 462
    தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கரும்பொருள் யாதொன்று மில்.
  3. குறள் 463
    ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினைஊக்கா ரறிவுடை யார்.
  4. குறள் 464
    தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பா டஞ்சு பவர்.
  5. குறள் 465
    வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதோ ராறு.
  6. குறள் 466
    செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.
  7. குறள் 467
    எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்எண்ணுவ மென்ப திழுக்கு.
  8. குறள் 468
    ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும்.
  9. குறள் 469
    நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்பண்பறிந் தாற்றாக் கடை.
  10. குறள் 470
    எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடுகொள்ளாத கொள்ளா துலகு.