குறள் 469 — தெரிந்து செயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்பண்பறிந் தாற்றாக் கடை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 96 · ஸ்கேன் 129 · மூலமும் சான்றும்