பொருட்பால் · அரசியல்

46. சிற்றினஞ்சேராமை

குறள் 451460
  1. குறள் 451
    சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும்.
  2. குறள் 452
    நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கினத்தியல்ப தாகும் அறிவு.
  3. குறள் 453
    மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்இன்னா னெனப்படுஞ் சொல்.
  4. குறள் 454
    மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கினத்துள தாகும் அறிவு.
  5. குறள் 455
    மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனந்தூய்மை தூவா வரும்.
  6. குறள் 456
    மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்கில்லைநன் றாகா வினை.
  7. குறள் 457
    மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்எல்லாப் புகழுந் தரும்.
  8. குறள் 458
    மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்கினநலம் ஏமாப் புடைத்து.
  9. குறள் 459
    மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்இனநலத்தி னேமாப் புடைத்து.
  10. குறள் 460
    நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉ மில்.