குறள் 452 — சிற்றினஞ்சேராமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கினத்தியல்ப தாகும் அறிவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும். அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 93 · ஸ்கேன் 126 · மூலமும் சான்றும்