பொருட்பால் · அரசியல் · சிற்றினஞ்சேராமை

குறள் 458சிற்றினஞ்சேராமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்கினநலம் ஏமாப் புடைத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 94 · ஸ்கேன் 127 · மூலமும் சான்றும்