பொருட்பால் · அரசியல்
45. பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 441–450
- குறள் 441அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல்.
- குறள் 442உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல்.
- குறள் 443அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல்.
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.
- குறள் 447இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரேகெடுக்குந் தகைமை யவர்.
- குறள் 448இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்.
- குறள் 449முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.