பொருட்பால் · அரசியல்

44. குற்றங்கடிதல்

குறள் 431440
  1. குறள் 431
    செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து.
  2. குறள் 432
    இவறலும் மாண்பிறந்த மானமும் மாணாஉவகையும் ஏதம் இறைக்கு.
  3. குறள் 433
    தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார்.
  4. குறள் 434
    குற்றமே காக்க பொருளாகக் குற்றமேஅற்றந் தரூஉம் பகை.
  5. குறள் 435
    வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்.
  6. குறள் 436
    தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்என்குற்ற மாகும் இறைக்கு.
  7. குறள் 437
    செயற்பால செய்யா திவறியான் செல்வம்உயற்பால தன்றிக் கெடும்.
  8. குறள் 438
    பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்எண்ணப் படுவதொன் றன்று.
  9. குறள் 439
    வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்கநன்றி பயவா வினை.
  10. குறள் 440
    காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல்.