பொருட்பால் · அரசியல்
43. அறிவுடைமை
குறள் 421–430
- குறள் 421அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண்.
- குறள் 422சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇநன்றின்பா லுய்ப்ப தறிவு.
- குறள் 423எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.
- குறள் 424எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவு.
- குறள் 425உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்கூம்பலு மில்ல தறிவு.
- குறள் 426எவ்வ துறைவ துலக முலகத்தோடவ்வ துறைவ தறிவு.
- குறள் 427அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்.
- குறள் 428அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவதஞ்சல் அறிவார் தொழில்.
- குறள் 429எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைஅதிர வருவதோர் நோய்.
- குறள் 430அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனு மிலர்.