பொருட்பால் · அரசியல் · அறிவுடைமை

குறள் 424அறிவுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் - சொல்லும் நுட்பமான கருத்துகளையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 87 · ஸ்கேன் 120 · மூலமும் சான்றும்