குறள் 423 — அறிவுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 87 · ஸ்கேன் 120 · மூலமும் சான்றும்