பொருட்பால் · அரசியல்

42. கேள்வி

குறள் 411420
  1. குறள் 411
    செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச் செல்வஞ்செல்வத்து ளெல்லாந் தலை.
  2. குறள் 412
    செவிக்குண வில்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும்.
  3. குறள் 413
    செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்ஆன்றாரோ டொப்பார் நிலத்து.
  4. குறள் 414
    கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கொற்கத்தின் ஊற்றாந் துணை.
  5. குறள் 415
    இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோ லற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
  6. குறள் 416
    எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்ஆன்ற பெருமை தரும்.
  7. குறள் 417
    பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்தீண்டிய கேள்வி யவர்.
  8. குறள் 418
    கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்தோட்கப் படாத செவி.
  9. குறள் 419
    நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கியவாயின ராத லரிது.
  10. குறள் 420
    செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினு மென்.