குறள் 417 — கேள்வி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்தீண்டிய கேள்வி யவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 86 · ஸ்கேன் 119 · மூலமும் சான்றும்