பொருட்பால் · அரசியல்
41. கல்லாமை
குறள் 401–410
- குறள் 401அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல்.
- குறள் 402கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று.
- குறள் 403கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லா திருக்கப் பெறின்.
- குறள் 404கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்கொள்ளார் அறிவுடை யார்.
- குறள் 405கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாடச் சோர்வு படும்.
- குறள் 406உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.
- குறள் 407நுண்மாண் நுழைபுல மில்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று.
- குறள் 408நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட்ட திரு.
- குறள் 409மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்கற்றா ரனைத்திலர் பாடு.
- குறள் 410விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்கற்றாரோ டேனை யவர்.