பொருட்பால் · அரசியல்

40. கல்வி

குறள் 391400
  1. குறள் 391
    கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.
  2. குறள் 392
    எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
  3. குறள் 393
    கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்.
  4. குறள் 394
    உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்.
  5. குறள் 395
    உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர்.
  6. குறள் 396
    தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு.
  7. குறள் 397
    யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்சாந்துணையுங் கல்லாத வாறு.
  8. குறள் 398
    ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கெழுமையும் ஏமாப் புடைத்து.
  9. குறள் 399
    தாமின் புறுவ துலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்.
  10. குறள் 400
    கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.