பொருட்பால் · அரசியல் · கல்வி

குறள் 395கல்வி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்கடையரே கல்லா தவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராகக் கருதப்படுவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 81 · ஸ்கேன் 114 · மூலமும் சான்றும்