பொருட்பால் · அரசியல்
39. இறைமாட்சி
குறள் 381–390
- குறள் 381படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசரு ளேறு.
- குறள் 382அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்எஞ்சாமை வேந்தற் கியல்பு.
- குறள் 383தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்நீங்கா நிலனாள் பவற்கு.
- குறள் 384அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்காமான முடைய தரசு.
- குறள் 385இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்தவகுத்தலும் வல்ல தரசு.
- குறள் 386காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்மீக்கூறும் மன்னன் நிலம்.
- குறள் 387இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்தான்கண் டனைத்திவ் வுலகு.
- குறள் 388முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கிறையென்று வைக்கப் படும்.
- குறள் 389செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ்த் தங்கு முலகு.
- குறள் 390கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உடையானாம் வேந்தர்க் கொளி.