குறள் 385 — இறைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்தவகுத்தலும் வல்ல தரசு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 79 · ஸ்கேன் 112 · மூலமும் சான்றும்