அறத்துப்பால் · ஊழியல்
38. ஊழ்
குறள் 371–380
- குறள் 371ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்று மடி.
- குறள் 372பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூழ் உற்றக் கடை.
- குறள் 373நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும்.
- குறள் 374இருவே றுலகத் தியற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறு.
- குறள் 375நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.
- குறள் 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம.
- குறள் 377வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடிதொகுத்தார்க்குந் துய்த்த லரிது.
- குறள் 378துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின்.
- குறள் 379நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லற் படுவ தெவன்.
- குறள் 380ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினுந் தான்முந் துறும்.