அறத்துப்பால் · துறவறவியல்

37. அவாவறுத்தல்

குறள் 361370
  1. குறள் 361
    அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்தவாஅப் பிறப்பீனும் வித்து.
  2. குறள் 362
    வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும்.
  3. குறள் 363
    வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லைஆண்டும் அஃதொப்ப தில்.
  4. குறள் 364
    தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றதுவாஅய்மை வேண்ட வரும்.
  5. குறள் 365
    அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்அற்றாக அற்ற திலர்.
  6. குறள் 366
    அஞ்சுவ தோரும் அறனே ஒருவனைவஞ்சிப்ப தோரும் அவா.
  7. குறள் 367
    அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும்.
  8. குறள் 368
    அவாவில்லார்க் கில்லாகுந் துன்பம்: துண்டேல்தவாஅது மேன்மேல் வரும்.
  9. குறள் 369
    இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்துன்பத்துள் துன்பங் கெடின்.
  10. குறள் 370
    ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும்.