அறத்துப்பால் · துறவறவியல்
36. மெய்யுணர்தல்
குறள் 351–360
- குறள் 351பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்மருளானாம் மாணாப் பிறப்பு.
- குறள் 352இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு.
- குறள் 353ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வான நணிய துடைத்து.
- குறள் 354ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர் வில்லா தவர்க்கு.
- குறள் 355எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.
- குறள் 356கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி.
- குறள் 357ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
- குறள் 358பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்செம்பொருள் காண்ப தறிவு.
- குறள் 359சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்சார்தரா சார்தரு நோய்.
- குறள் 360காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்நாமங் கெடக்கெடு நோய்.