அறத்துப்பால் · துறவறவியல்
35. துறவு
குறள் 341–350
- குறள் 341யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன்.
- குறள் 342வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டியற் பால பல.
- குறள் 343அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
- குறள் 344இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து.
- குறள் 345மற்றுந் தொடர்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்உற்றார்க் குடம்பும் மிகை.
- குறள் 346யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் புகும்.
- குறள் 347பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு.
- குறள் 348தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிவலைப்பட்டார் மற்றை யவர்.
- குறள் 349பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுநிலையாமை காணப் படும்.
- குறள் 350பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு.