அறத்துப்பால் · துறவறவியல் · துறவு

குறள் 345துறவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மற்றுந் தொடர்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்உற்றார்க் குடம்பும் மிகை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும் போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?

மூலம் · அச்சுப் பக்கம் 69 · ஸ்கேன் 102 · மூலமும் சான்றும்