அறத்துப்பால் · துறவறவியல் · துறவு

குறள் 348துறவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிவலைப்பட்டார் மற்றை யவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 70 · ஸ்கேன் 103 · மூலமும் சான்றும்