குறள் 349 — துறவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுநிலையாமை காணப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்.
மூலம் · அச்சுப் பக்கம் 70 · ஸ்கேன் 103 · மூலமும் சான்றும்