அறத்துப்பால் · துறவறவியல்

34. நிலையாமை

குறள் 331340
  1. குறள் 331
    நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை.
  2. குறள் 332
    கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று.
  3. குறள் 333
    அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல்.
  4. குறள் 334
    நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்வாள துணர்வார்ப் பெறின்.
  5. குறள் 335
    நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைமேற்சென்று செய்யப் படும்.
  6. குறள் 336
    நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை யுடைத்திவ் வுலகு.
  7. குறள் 337
    ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுபகோடியு மல்ல பல.
  8. குறள் 338
    குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றேஉடம்போ டுயிரிடை நட்பு.
  9. குறள் 339
    உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கிவிழிப்பது போலும் பிறப்பு.
  10. குறள் 340
    புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்துச்சி லிருந்த உயிர்க்கு.