அறத்துப்பால் · துறவறவியல்

33. கொல்லாமை

குறள் 321330
  1. குறள் 321
    அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும்.
  2. குறள் 322
    பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்தொகுத்தவற்று ளெல்லாந் தலை.
  3. குறள் 323
    ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்பின்சாரப் பொய்யாமை நன்று.
  4. குறள் 324
    நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்கொல்லாமை சூழும் நெறி.
  5. குறள் 325
    நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்கொல்லாமை சூழ்வான் தலை.
  6. குறள் 326
    கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லா துயிருண்ணுங் கூற்று.
  7. குறள் 327
    தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிதின்னுயிர் நீக்கும் வினை.
  8. குறள் 328
    நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்கொன்றாகும் ஆக்கங் கடை.
  9. குறள் 329
    கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்புன்மை தெரிவா ரகத்து.
  10. குறள் 330
    உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர்.