அறத்துப்பால் · துறவறவியல் · கொல்லாமை

குறள் 322கொல்லாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்தொகுத்தவற்று ளெல்லாந் தலை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்து கொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 65 · ஸ்கேன் 98 · மூலமும் சான்றும்