அறத்துப்பால் · துறவறவியல்
32. இன்னா செய்யாமை
குறள் 311–320
- குறள் 311சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.
- குறள் 312கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.
- குறள் 313செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்.
- குறள் 314இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.
- குறள் 315அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போற் போற்றாக் கடை.
- குறள் 316இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கட் செயல்.
- குறள் 317எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணாசெய் யாமை தலை.
- குறள் 318தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க் கின்னா செயல்.
- குறள் 319பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னாபிற்பகல் தாமே வரும்.
- குறள் 320நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்.