குறள் 311 — இன்னா செய்யாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குக் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 63 · ஸ்கேன் 96 · மூலமும் சான்றும்