அறத்துப்பால் · துறவறவியல் · இன்னா செய்யாமை

குறள் 312இன்னா செய்யாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 63 · ஸ்கேன் 96 · மூலமும் சான்றும்