அறத்துப்பால் · துறவறவியல் · இன்னா செய்யாமை

குறள் 313இன்னா செய்யாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 63 · ஸ்கேன் 96 · மூலமும் சான்றும்